சங்கரன்கோவில்: விவசாயி வெட்டிக் கொலை
1 min read
Sankarankovil: Farmer hacked to death
9.3.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் விவசாயி வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் வயலி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையா என்பவரது மகன் ஆறுமுகவேல் (வயது 63) இவர் நேற்று முன்தினம் மாலை வயலில் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அரிவாளால் சராசரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதில் விவசாயி ஆறுமுகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி ஆறுமுகவேலுவின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் சொத்து தகராறு காரணமாக இந்த
கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.