June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்

1 min read

Tenkasi District Legal Services Commission: Inaugurated by Justice Rajavelu

10.3.2026
தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேலு தொடங்கி வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பி.ராஜவேலு தலைமை தாங்கி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ் குமார், முதன்மை சார்பு நீதிபதி பிஸ்மிதா, கூடுதல் சார்பு நீதிபதி முருகவேல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி முத்துலட்சுமி, சிவகிரி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியுமான ஜெனிபர் ஜோசப், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி காளீஸ்வரி, சங்கரன்கோவில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, ஆலங்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்தாக, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பி.ராஜவேலு நிருபர்களிடம் கூறியதாவது:
இதுவரை திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைமையில் தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வந்தது. தற்போது தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் குழு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இனி தென்காசி மாவட்ட பொதுமக்கள் திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நாட வேண்டியதில்லை. அவர்கள் தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நாடினால் போதுமானது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தனியாக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கூடுதல் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மேலாளராக செயல்படுவார். சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் மனுக்கள் வழங்கலாம். ஓவ்வொரு மாதமும் மாவட்ட சட்டப்பணிகள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டங்களில்ல் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பளார் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய 4 புறநகர்களிலும் வட்ட அளவில் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்படும், தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்; மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்பே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனுக்களை வழங்கி பரிகாரம் காணலாம். முக்கிய பிரச்சினைகள் குறித்து நீதிமன்றம் மூலம் பரிகாரம் பெறப்படும். இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இங்கு மனு அளித்து பரிகாரம் பெறலாம். மேலும் சட்டம் சாராத பட்டா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இங்கு மனுக்கள் அளிக்கலாம். அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தென்காசி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *