சுரண்டை பகுதியில் ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைந்தனர்
1 min read
OPS team members in Surandai area joined AIADMK
10.3.2026
தென்காசி தெற்கு மாவட்டம், சுரண்டை நகராட்சி பகுதியில் ஓபிஎஸ் அணியினர் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தென்காசி தெற்கு மாவட்டம் சுரண்டை நகர 24 வது வார்டு ஒபிஸ் அணி செயலாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூல்பாண்டியன் தலைமையில் 20 நபர்கள் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்து கொண்டனர்,
ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.செல்வ மோகன் தாஸ் பாண்டியன் கைத்தறி ஆடைகளை அணிவித்து வரவேற்றார்
இந்நிகழ்வின் போது சுரண்டை நகர அதிமுக செயலாளர் சங்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.