June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை – தேர்தல் ஆணையம்

1 min read

No need to cover statues of deceased leaders – Election Commission

17.3.2026
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுதாக்கல் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்கள் செய்வதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சில இடங்களில் மறைந்த தலைவர்களின் சிலைகளை தேர்தல் அதிகாரிகள் மறைத்ததாக புகார்கள் எழுந்தன.

இதற்கு திமுக.,அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.அதன்படி, மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிறுவுத்தி உள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஹேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *