தேர்தல் பறக்கும் படை இதுவரை ரூ.189 கோடி பறிமுதல் செய்தது
1 min read
Election Flying Squad has so far seized Rs. 189 crore
26.3.2026
தமிழக தலைமைத் தேர்தல் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026
- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் , தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் இன்று மின்னணு காலச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த மின்னணு காலச் சீட்டுகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு நேரத்தைப் பெற வழி வகை செய்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் ஆணையம் வெளியிட்டுள்ள நடைமுறை அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு முறையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் , 24×7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 26.03.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் தேர்தல் பறக்கும் படை இதுவரை ரூ.189 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- மாநிலம் முழுவதும் 2169 பறக்கும் படைகள் மற்றும் 2166 நிலை கண்காணிப்புக் குழுக்கள் பணம் , மதுபானம் மற்றும் இதர கவர்ச்சி பொருட்கள் விதிமுறைகளை மீறி வழங்கி வாக்குகளைக் கவருவதை தடுக்கும் பொருட்டு பணியாற்றி வருகின்றன. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்களை உரிய ஆவணங்களை சமர்பித்து, திரும்ப பெற்றுக் கொள்ள மாவட்டந்தோறும் குறை தீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பறிமுதல்கள் தொடர்பான குறைகளுக்கு இக்குழுக்களை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகிறது.. மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு.
மாவட்டத்தின் பெயர் – தொலைபேசி எண்கள்
- திருவள்ளூர் 7373704202
- சென்னை 9551055182
- காஞ்சிபுரம் 9442745251
- வேலூர் 7373704205
- கிருஷ்ணகிரி 9500014446
- தர்மபுரி 7373704209
- திருவண்ணாமலை 7373704206
- விழுப்புரம் 7402606327
- சேலம் 9444094335
- நாமக்கல் 7373704208
- ஈரோடு 9442149101
- நீலகிரி 7373704231
- கோயம்புத்துதூர் 7373704213
- திண்டுக்கல் 7373704224
- கரூர் 7373704218
- திருச்சிராப்பள்ளி 7373704217
- பெரம்பலூர் 7373704220
- கடலூர் 7373704203
- நாகப்பட்டினம் 7373704215
- திருவாரூர் 9444094386
- தஞ்சாவூர் 7373704214
- புதுக்கோட்டை 7373704221
- சிவகங்கை 7373704227
- மதுரை 7373704222
- தேனி 7373704223
- விருதுநகர் 7373704226
- ராமநாதபுரம் 7373704225
- தூத்துக்குடி 7373704229
- திருநெல்வேலி 7373404228
- கன்னியாகுமரி 9445000930
- அரியலூர் 7373704219
- திருப்பூர் 7373704212
- கள்ளக்குறிச்சி 9003328441
- தென்காசி 7305089505
- செங்கல்பட்டு 7305089502
- திருப்பத்தூர் 7305089501
- ராணிப்பேட்டை 7305089500
- மயிலாடுதுறை 9176001546
“தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.