June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் நாளை முதல் இரவு நேர விமான சேவை தொடக்கம்

1 min read

Night flight service to start in Thoothukudi from tomorrow

28.3.2026
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நாளை (மார்ச் 29) ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு நேர விமான சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ளது. இதனால் தென் மாவட்டப் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் தரை இறங்குவதற்கும் மற்றும் இரவு நேரங்களில் விமானங்களை இயக்குவதற்கும் தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது இரவு நேர சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மாற்றப்பட்ட விமான கால அட்டவணை (நாளை முதல்):

நாளை (மார்ச் 29) முதல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் விமானங்களின் நேரங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

சென்னை-தூத்துக்குடி: சென்னையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

தூத்துக்குடி-சென்னை: தூத்துக்குடியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *