தென்காசி எஸ்.பி. மாற்றம்- மயில்வாகனன்நியமனம்
1 min read
Tenkasi SP Change- Mayilvaganan Appointment
28.3.2026
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்
தேர்தல் காலத்தை முன்னிட்டு நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டு வரும் தேர்தல் ஆணையம், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜி எஸ் மாதவனை பணியிட மாற்றம் செய்த நிலையில் புதிய எஸ்.பி.யாக மயில் வாகனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன், இதற்கு முன்பு 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி உட்கோட்ட துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அந்த காலகட்டத்தில் தென்காசி நகரில் ஒரே நாளில் 6 கொலைகள் நடைபெற்றதால் நிலைமை மிகுந்த பதட்டமாக இருந்தது.
அந்த நேரத்தில் தமிழகத்தின் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியின் நேரடி உத்தரவின் பேரிலும் கண்காணிப்பிலும் செயல்பட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை திறம்படக் கட்டுப்படுத்தி, தென்காசியில் அமைதியை நிலைநிறுத்தியவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
இந்நிலையில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கும் மயில் வாகனன் நியமனம், பொதுமக்களிடையே நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.