June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

1 min read

Ramadoss released the second phase candidate list!

31/3/2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பிரிவும், வி.கே. சசிகலா தொடங்கியுள்ள அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் 10 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.

அதன்படி திருப்போரூரில் என்.எஸ். ஏகாம்பரம், உத்தரிமேரூரில் ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டியில் சங்கர், திருவள்ளூரில் நா. வெங்கடேசன், செஞ்சியில் கனல், தருமபுரியில் அ.சரவணன், ஜெயங்கொண்டத்தில் காடுவெட்டி ரவி, செய்யாற்றில் தி.கா.சீனிவாசன், அந்தியூரில் எஸ்.சி.ஆர். கோபால், புவனகிரியில் எம்.ஆர். பாலமுருகன் ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஐந்துபேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அன்புமணி தரப்பில் தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *