June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

மராட்டியதில் கிணற்றில் கார் பாய்ந்து குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

1 min read

9 people, including children, die after car falls into well in Maharashtra

4.4.2026
மகாராஷ்டிரா மாநிலம் திண்டோரி தாலுக்காவில் உள்ள இந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் தத்தாத்ரேய தர்கோடே (வயது 34). இவர் தனது மனைவி ரேஷ்மா (30) மகள் ராக்கி (10) மற்றும் உறவினர்கள் ஆஷா அனில் தர்கோடே (32), மாதுரி (13), ஸ்ராவணி (11), ஸ்ரேயாஷ் (11), ஸ்ரிஷ்டி (14) சம்ருத்தி (7) ஆகியோருடன் ஒரே காரில் சிவாஜிநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர் காரில் தனது குடும்பத்துடன் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். நாசிக் அருகே உள்ள திண்டோரி பகுதியில் சென்ற போது சுனில் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி, அருகில் தண்ணீர் நிரம்பியிருந்த ஒரு கிணற்றில் விழுந்தது. இதில் காரில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கிணறு முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்ததால், மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு கிரேன்களைப் பயன்படுத்தி கிணற்றில் மூழ்கிய காரை வெளியே எடுத்தனர். இதில் காரில் இருந்த 9 பேரையும் பிணமாக மீட்டனர். இதை அடுத்து போலீசார் உடல்க ளை வேத பரிசோ தனை க்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *