ஊழல் செய்யும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது – பியூஷ் கோயல் பேட்டி
1 min read
Corrupt DMK should not come back to power – Piyush Goyal interview
4.4.2026
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் டபுள் எஞ்சின் அரசை கொண்டுவர வேண்டும். தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிதியாக மத்திய அரசு ரூ.80,000 கோடி வழங்கியுள்ளது. தமிழக அரசு வட்டியாக மட்டும் ரூ.76,000 கோடியை இந்தாண்டு செலுத்தியுள்ளது. நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது முறைகேடு தான். தமிழ்நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது
எந்த திட்டங்களும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படப்படவில்லை. திமுக ஊழல் அரசியல் செய்கிறது.ரூ.12 லட்சம் கோடி தொழில் முதலீடு என்றார்கள். ஆனால் எதுவும் வரவில்லை. மாநில அரசுகளிலேயே பொறுப்பற்ற அரசாக தமிழ்நாடு இருக்கிறது.
சிறு குறு நிறுவனங்கள் முடக்கப்பட்டு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.வெளிநாட்டு முதலீடுகள் வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் வேலைவாய்ப்புகள் எங்கே போயின?
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஏன் தயங்குகின்றன? அரசின் வருவாய் எல்லாம் கடனை அடைக்கவே சரியாக உள்ளது. மத்திய அரசு கொடுத்த பணம் எங்கே போனது?வெளிநாட்டு முதலீடுகள் வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் வேலைவாய்ப்புகள் எங்கே போயின? ஜிஎஸ்டி மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் வருவாய் எங்கே செல்கிறது? தமிழக முதல்-அமைச்சரிடம் ஒரு கேள்வி கேட்டுகிறேன். பணம் எங்கே சென்றது?
தமிழ்நாட்டின் தொழில்துறை சிறப்பாக இருக்கிறது. நிர்வாக காரணத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது.
மது விற்பனை, அரசு ஒப்பந்த பணிகள் அனைத்திலும் கமிஷன். எந்த திட்டங்களும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை. திமுக ஊழல் அரசியல் செய்கிறது. டி.ஆர்.பாலு, ப.சிதம்பரம், தயாநிதி மாறன் ஆகியோர் ஊழல் வழக்கை எதிர்கொள்கின்றனர். ஊழல் செய்யும் திமுக தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. மோடி வழிகாட்டுதலுடன் பழனிசாமி நல்லாட்சி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.