தென்காசி அருகே விசிக மாநில நிர்வாகி வீட்டில் சோதனை
1 min read
Search underway at VVIP state executive’s house near Tenkasi
4.4.2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலப்புதூர் பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மேலப்புதூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக அணி மாநில துணை அமைப்பாளரான மோசஸ் என்பவரது வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இரண்டு வாகனங்களில் வருகை தந்த வருமானவரித்துறை அதிகாரிகள் விசிக பிரமுகர் மோசஸ் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில், அவரது வீட்டில் உள்ள பல்வேறு ஆவணங்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இதே மோசஸ் வீட்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலின் போதும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும், விசிக பிரமுகர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வரும் நிலையில், தேர்தல் நேரங்களில் பண பட்டுவாடா ஏதேனும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா? இல்லையெனில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாகவும் வருமான வரித்துணர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை, புளியரை பகுதிகளில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பல்வேறு முக்கிய தலைவர்கள் உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.