June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் காங். வேட்பாளர் முன்னாள் மத்திய மந்திரி அருணாசலத்தின் மருமகன்

1 min read

Sankarankovil Congress candidate is the son-in-law of former Union Minister Arunachalam

4.4.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் சங்கை கணேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரது வயது 58 இவர் பிறந்த தேதி 17.06.1968. தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவரது தந்தை பெயர் எஸ்.சங்கையா (எ) குட்டி சங்கை கணேசன் எம்.ஏ., பி.எல் வரை படித்து உளளார் தற்போது வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார்.
இவர் 2011 சட்டமன்ற தேர்தலில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார்.
இவர் முன்னாள் மத்திய மந்திரி எம்.அருணாசலத்தின் சொந்த சகோதரரின் மகன் ஆவார். இவர் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளானை கோட்டை கிராமத்தில் வசித்து வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *