June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கூடுதல் பிரமாணப் பத்திரம்; விஜய் தாக்கல்

1 min read

Vijay files additional affidavit

4.4.2026
சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் சமர்ப்பித்து உள்ளார். பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் குற்ற வழக்கு இல்லையென விஜய் தெரிவித்து இருந்தார்.
திருச்சி கிழக்கிற்கான வேட்புமனுவில் பெரம்பூர் பிரசாரத்தின் போது மார்ச் 30ம் தேதி ஒரு வழக்கும், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மதுரை மாநாடு தொடர்பான ஒரு வழக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் சமர்ப்பித்துள்ள வேட்புமனுக்களில் இவ்வாறு மாறுப்பட்ட, முரண்பட்ட தகவல்கள் இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை விஜய் இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், 2025ம் ஆண்டு மதுரை மாநாடு தொடர்பாக விஜய் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் கொளத்தூரில் பிரசாரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த விபரங்களை சேர்த்துள்ளார்.

அதேபோல, இரு பிரமாண பத்திரங்களிலும் வயதில் இருந்த வேறுபாடு தொடர்பான மாற்றமும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *