கடையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் ஆதரவு திரட்டினார்
1 min read
AIADMK candidate K.R.P. Prabhakaran rallied support in the Kadayam area.
4.4.2026
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் கடையம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
நடைபெற இருக்கின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி. பிரபாகரன் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடையம் தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய பிரமுகர்களையும் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், கோவிந்தபேரி, தருமபுரமடம், சிவசைலம்,மேல ஆம்பூர், உள்ளிட்ட ஊராட்சி மன்ற பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். கிறிஸ்தவ தேவாலய நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.வி. முருகேசன், பேரூர் அதிமுக பொறுப்பாளர் நெல்லையப்பன், கோவிந்தப்பேரி இளங்கோ, மகாலிங்கம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.