மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
1 min read
Madurai Melur constituency Congress candidate announcement
5.4.2026
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் அறிவித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.