மு.க.ஸ்டாலினால் மீண்டும் முதல்-அமைச்சராக முடியாது: பியூஸ் கோயல் பேச்சு
1 min read
M.K. Stalin cannot become the Chief Minister again: Piyush Goyal speech
7.4.2026
பாஜக ஸ்தாபன தினத்தையொட்டி சென்னை கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றியபின் மத்திய மந்திரி பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாஜக தொடங்கப்பட்ட நாள் இன்று. குடும்ப ஆட்சியாகவும், ஊழல் நிறைந்த ஆட்சியாகவும் இருந்தது தான் திமுக ஆட்சி. திமுக என்றாலே வாரிசு அரசியல் தான். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., சபரீசன் மட்டுமே திமுக.
திமுகவில் தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் தோல்வியால் மணல் கொள்ளை, ஊழல் என மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மு.க.ஸ்டாலினால் மீண்டும் முதல்-அமைச்சராக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.