தமிழக சட்டசபை தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல்
1 min read
Tamil Nadu Assembly Election Final Candidate List
10.4.2026
புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சென்னையின் 16 தொகுதிகளில் 616 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 173 தள்ளுபடி, 24 வாபஸ் பெறப்பட்டு, இறுதியாக 419 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது .
வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 ஆம் துவங்கி, கடந்த 6 ஆம் தேதி வரை நடந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட மொத்தம், 7,599 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பல வேட்பாளர்கள், தங்கள் பெயரில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மொத்தம் 616 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 173 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் 24 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவர் உட்பட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முக்கிய கட்சித்தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் களம் இறங்கியுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
மு.க.ஸ்டாலின் – தி.மு.க.
பி.சந்தானகிருஷ்னான் – அ.தி.மு.க.
வி.எஸ்.பாபு – -த.வெ.க.
சவுந்தரபாண்டியன் லூடர் சேத் – நாம் தமிழர்
சுபாஷினி – பகுஜன் சமாஜ் கட்சி
மேலும் 32 சுயேச்சைகள்
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார்.
எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.)
சி.காசி (தி.மு.க.)
பிரியதர்ஷினி (நாம் தமிழர் கட்சி)
கோவிந்தராஜ் (தமிழக வாழ்வுரிமை கட்சி)
ஏ.எல்.சுரேஷ் (பா.ம.க. ராமதாஸ் அணி)
மேலும் சுயேச்சைகள் 10 பேர்.
இங்கு த.வெ.க. வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் போட்டியிடுவோர் விவரம் வருமாறு:-
ஜோசப் விஜய் – த.வெ.க.
ஆர்.டி.சேகர் – தி.மு.க.
திலகபாமா – பா.ம.க.
வெற்றி தமிழன் – நாம் தமிழர் கட்சி
மற்றும் சுயேச்சைகள் 43 பேர்
திருச்சி கிழக்கில் போட்டியிடுவோர் விவரம் வருமாறு-:–
ஜோசப் விஜய் (த.வெ.க.)
எஸ்.இனிகோ இருதயராஜ் (தி.மு.க.)
ஜி.ராஜசேகரன் (அ.தி.மு.க.)
டாக்டர் வி.கிருஷ்ணசாமி (நாம் தமிழர்)
கட்சிகள், சுயேச்சைகள் 17 பேர்
சீமான்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவோர் விவரம் வருமாறு:
சீமான் (நாம் தமிழர்)
மாங்குடி (காங்கிரஸ்)
தேர்போகி பாண்டி (அ.ம.மு.க.)
டாக்டர் டி.கே.பிரபு (த.வெ.க.)
பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள்- 16 போட்டியிடுகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அவற்றில் 4,275 ஏற்கப்பட்டு, 2,543 தள்ளுபடி செய்யப்பட்டன. 437 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டிக் களத்தில் இருந்தனர்.
மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 4 ஆயிரத்து 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 419 பேர் களம் காண்கிறார்கள்.
கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 79 பேரும், அம்பையில் குறைந்த அளவாக 5 பேரும் களம் காண்கிறார்கள். அதாவது கரூரில் மொத்தம் 100 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் 17 நிராகரிக்கப்பட்டு, 83 ஏற்கப்பட்டன. 4 சுயேச்சைகள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் 79 பேர் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதி என்னும் பெருமையை கரூர் சட்டமன்ற தொகுதி பெற்றுள்ளது.
ஆனால் நெல்லை மாவட்டம் அம்பை தொகுதியில் வெறும் 5 பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.), வி.பி.துரை (காங்கிரஸ்), ராஜகோபால் (த.வெ.க.). சிவசங்கரன் (நாம் தமிழர்), இசைக்கண்ணன் (பகுஜன் சமாஜ்) என 5 பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.