June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடி : நெல் அறுவடை முடிந்த வயலுக்கு வைத்த தீயில் சிக்கி 32 செம்மறி ஆடுகள் பலி

1 min read

Paramakudi: 32 sheep and goats die in a fire set in a field after the paddy harvest

10.4.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்த பழனி மகன் முத்துகுமார் (வயது 36).இவர் தனக்கு சொந்தமான 32 செம்மறி ஆடு குட்டிகளை மேய்ச்சலுக்காக கிடையில் அடைத்து வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலில் நெல் அறுவடை முடிந்ததால் வயலுக்கு தீ வைத்துள்ளார். அந்த தீ மளமளவென பிடித்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் ஆட்டுகுட்டிகள் அடைக்கப் பட்டிருந்த கிடை பகுதிக்கு பரவி தீ பிடித்தது. இதில் 32 செம்மறி ஆட்டு குட்டிகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.

தகவல் தெரிந்ததும்,பரமக்குடி தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் நாகசாமி சம்பவ இடத்தினை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *