பா.ஜ.க.வில் உட்கட்சி பூசல் : நிர்வாகி மீது தாக்குதல், கார் கண்ணாடிகள் உடைப்பு
1 min read
Internal dispute in BJP: Attack on executive, car windows broken
10.4.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூரைச் சேர்ந்த கோபால் மகன் கண்ணன்.பா.ஜ.க.பிரமுகரான இவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பரமக்குடி ஒன்றிய தலைவராக நியமிக்கப் பட்டார்.
இது பா.ஜ.க.வை சேர்ந்த சிலருக்கு பிடிக்காமல் அதிர்ப்தியுடனும்,ஆத்திரத்திலும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு செல்வதற்காக நிர்வாகி கண்ணன் தனது காரில் சென்றுள்ளார்.கீழப்பெருங்கரை பகுதியில் சென்ற இவரது காரை பார்த்திபனூரை சேர்ந்த முத்துபாண்டி உள்பட 5 பேர் கொண்ட கும்பல் கண்ணனின் காரை வழிமறித்து கண்ணனை சரமாரியாக தாக்கியதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அக்கும்பல் அவரது கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
பின்பு படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து பார்த்திபனூர் காவல் துறையினர் பார்த்திபனூர் முத்துபாண்டி உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.