தென்காசியில் நடிகர் இமான் அண்ணாச்சி தீவிர பிரச்சாரம்
1 min read
Actor Iman Annachi campaigning vigorously in Tenkasi
11.4.2026
தென்காசியில் திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் திமுக வேட்பாளர் டாக்டர் கலைகதிரவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் கீழப்பாவூர் தெற்கு ஒன்றியம் ஆவுடையானூர், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் புல்லுகாட்டுவலசை, குறும்பலாபேரி ஆகிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சொன்னதை மட்டுமே செய்யக்கூடியது திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல, சொல்லாத அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி தந்தவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் நம் முதல்வர்; ஸ்டாலின் மிகச்சிறப்பாக 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தி முடித்துள்ளார். இன்னும் ஐந்து ஆண்டுகள் மட்டும் அல்ல வரக்கூடிய எல்லா தேர்தலிலும் திராவிட முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தென்காசி தொகுதியை பொறுத்தமட்டில் உங்களுடைய குறைகளை கேட்டறிந்து, அதனை தீர்க்கக்கூடிய நம்முடைய வேட்பாளர் டாக்டர் கலைகதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரசாரத்திற்கு வந்த இமான் அண்ணாச்சி மற்றும் தலைமைக்கழக பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோருக்கு கீழப்பாவூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய பொறுப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இப்பிரசார நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் இராமஉதயசூரியன், மாவட்ட கவுன்சிலர்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், கல்லூரணி ஊராட்சித் தலைவர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் அருள், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், ஜான்நியூட்டன், மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைசிறுத்தைகள், தமிழ்புலிகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.