June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவு- 5.18 கோடி பெயர்கள் நீக்கம்

1 min read


SIR work completed in 12 states – 5.18 crore names removed

12.4.2026
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டாக பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணியை மேற்கொண்டது.

2-வது கட்டமாக தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா, புதுச்சேரி, அந்தமான், லட்சதீவு, குஜராத், மத்திய பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் SIR பணியை மேற்கொண்டது.

தற்போது இந்த பணி முழுமையாக நிறைவடைந்ததுள்ளது. இந்த SIR பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் 45.81 கோடி பேர் இடம் பெற்றுள்ளது. 5.18 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளது. இதில் முந்தைய பட்டியலில் இருந்து 10.2 சதவீதம் ஆகும்.

66,88,636 இறந்தவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் மட்டும் 25.47 லட்சம் பெயர் நீக்கப்பட்டள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து சுமார் 24.16 பெயர் நீக்கப்பட்டுள்ளது.

3-வது கட்ட பணி 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் நடைபெற இருக்கிறது. இங்கு 40 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

ஐந்து மாநில தேர்தல் நிறைவடைந்த பின்னர் 3-ம் கட்ட பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *