பாப்பாக்குடி அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்
1 min read
Trucks collide head-on near Papakudi
12.4.2026
தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே அதிவேகமாக வந்த கேரளாவுக்கு கனிம வளங்கள் அள்ளிச் செல்லும் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதியது.
கடையம் முக்கூடல் சாலையில் பாப்பாக்குடியை நோக்கி சென்று கொண்டிருந்த கனரக டிப்பர் லாரியும் கருங்கற்கள் ஏற்றி வந்து கொண்டிருந்த கனரக டிப்பர் லாரியும் அதிவேகமாக வந்ததால் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இதில் கருங்கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததால் டயர் வெடித்து எதிர்திசையில் மரத்தில் மோதி நின்றது. நல்வாய்ப்பாக வேறு வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கவில்லை. இரு வாகன ஓட்டுநர்களும் எந்த காயமும் இல்லாமல் தப்பித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் மற்றும் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்தனர்.
அதிவேகத்தில் பயணிக்கும் கனிமவளங்களை அள்ளிச்செல்லும் கனரக டிப்பர் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் சாலைகள் சேதமடைவதோடு உயிர் பயத்தோடு பயணிப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.