June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ராகுல் காந்தி 18-ந் தேதி தமிழகம் வருகை

1 min read

Rahul Gandhi to visit Tamil Nadu on 18th

16.4.2026
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள்ன.

தமிழகத்தில் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக 18-ந் தேதி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறார். காலையில் 11.30 மணிக்கு பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்பு அங்கிருந்து சோளிங்கர் மற்றும் துறையூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

இதன்பின்பு 20-ந் தேதி மீண்டும் தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி பிரசாரத்தில் பங்கேற்க வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 19மற்றும் 20-ந் தேதிகளில் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வருகை புரிகிறார். 19-ந் தேதி திருநெல்வேலியிலும், 20-ந் தேதி கன்னியாகுமரியிலும் கார்கே பிரசாரம் செய்ய இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *