கடையநல்லூர்: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 3 பேர் கைது- ரூ.1 லட்சம் பறிமுதல்
1 min read
Kadayanallur: 3 people arrested for trying to give money to voters – Rs. 1 lakh seized
22/4/2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி பகுதியில் அரசியல் கட்சிகள் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தீவிர படுத்திய நிலையில் இரண்டு கட்சிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வந்த நிலையில் சொக்கம்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக மாவட்ட தேர்தல் கண்ட்ரோல் நிலையத்துக்கு தொலைபேசியின் மூலம் புகார் வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுபாஷினி தலைமைகளான பறக்கும் படையினர் சொக்கம்பட்டி பகுதிகளுக்கு சென்று தீவிர சோதனைகள் ஈடுபட்ட பொழுது அந்தப் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயன்ற மூன்று அரசியல் கட்சியினர்களை சோதனை செய்த பொழுது அவர்களின் பாக்கெட்டில் 1 லட்சத்து 2000 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த பணத்தை அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்றதின் அடிப்படையில் அவர்கள் மூன்று பேரையும் பறக்கும் படை போலீசார் பிடித்து வந்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் பறக்கும் படை அலுவலர் சுபாஷினி கொடுத்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.