July 28, 2026

Seithi Saral

Tamil News Channel

நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கட்டாயம்-தென்காசி ஆட்சியர் தகவல்

1 min read


Fingerprint registration mandatory at fair price shops: Tenkasi Collector

27.7.2026
தென்காசி மாவட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிலித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்கள். குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகைப் பதிவினை நியாய விலைக்கடைகளில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் இப்பணி 94:12% நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 45,570 குடும்ப றுப்பினர்கள் கைரேகைப் பதிவினை மேற்கொள்ளவில்லை.

இதுவரை கைரேகைப் பதிவினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள். குடும்ப அட்டையுடன் நியாயவிலைக் கடைக்குச் சென்று கைரேகையினைப் பதிவு செய்து இ. கே. ஒய். சி
ஐ புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

வெளியூரில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள ரேசன் கடைகளில் தங்கள் கைரேகையை புதுப்பிக்கலாம். கைரேகை பதிவாகாத குழந்தைகள் மற்றும் முதியோர்கள் முதலில் தங்கள் ஆதார் அட்டையில் விரல்ரேகை மற்றும் கண் பதிவைப் புதுப்பித்த பின்னரே e-KYC-ஐ மேற்கொள்ள முடியும். இதற்காக அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் இ.சேவை மையங்கள் மற்றும் ஆதார் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை அணுகி ஆதார் புதுப்பிப்பை மேற்கொண்ட பிறகு, குடும்ப அட்டையுடன் நியாயவிலைக் கடைக்குச் சென்று கே. ஒய். சியை புதுப்பிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குடும்ப அட்டை உறுப்பினர்கள் 31.07.2026-ஆம் தேதிக்குள் அவரவர் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாய விலைக்கடையில் தங்கள் கைரேகைப் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *