June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் திமுக அலுவலகத்தில் ரூ.44.37 லட்சம் பறிமுதல்

1 min read

Rs. 44.37 lakh seized from Kadayanallur DMK office

22.4.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி பகுதியில் அரசியல் கட்சிகள் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தீவிர படுத்திய நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த நிலையில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை கடையநல்லூர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதற்காக மூட்ட மூட்டையாக பணம் இருப்பதாக மாவட்ட தேர்தல் கண்ட்ரோல் நிலையத்துக்கு தொலைபேசியின் மூலம் புகார் வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பறக்கும் படையினர் திமுக அலுவலகத்திற்கு சென்று தீவிர சோதனைகள் ஈடுபட்ட பொழுது மூட்டையில் கட்டு கட்டாக 44 லட்சத்து 37,000 ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர் பத்து லட்சத்திற்கு அதிகமான பணம் இருந்ததால் இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் .வருமான வரி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட 44 லட்ச ரூபாய் பணத்தை வருமான வரி அதிகாரிகளிடம் தேர்தல் நடத்தும் உதவிஅலுவலர் ராஜேந்திரன் வழங்கினார் . கட்சி அலுவலகத்தில் 44 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *