பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கொலை-நண்பர் கைது
1 min read
Youth murdered near Pavurchatram – friend arrested
27/4/2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே
கல் லூத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (வயது 20). இரு வரும் சிறு வயது முதல் நண்பர்கள். தற்பொழுது இருவரும் சேர்ந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனர்.
இருவரும் புதிய செல்போன் வாங்குவதற்காக பாவூர்சத்திரம் வந்துள்ளனர். அதன்பின் கீழப்பாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் பைக்கில் கீழப்பாவூர் அருணாப்பேரி சாலையில் சென்ற போது இருவருக்கும் திடீ ரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் முகிலன் (எ) வசந்த், பிரவீனை கீழே தள்ளி
விட்டதாக கூறப்படுகிறது. இதில் பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட் டது. இதையறிந்த முகிலன் (எ) வசந்த் இந்த சம்பவத்தை, பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு விட்டதாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் உமா, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் வழக் குப்பதிவு செய்து முகிலன் என்ற வசந்திடம் விசாரணை செய்ததில் அவர் முண்ணுக்கு பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசா ரணை மேற்கொண்டனர்.
இதில் முகிலன் என்ற வசந்த் தனது நண்பர் பிரவீனை கீழே தள்ளி விட்டு அதன் மூலம் அவருக்கு காயம் அடைந்தது உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்தி ரம் போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி முகிலன் (எ) வசந்தை கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இறந்த பிரவீனுக்கு பிரியா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் குழந் தையும் உள்ளது.
குடிபோதையில் தனது நண் பரை கொலை செய்த சம்பவம் பாவூர்சத்திரம் மற்றும் கல்லூத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.