நெல்லையில் மகளுக்கு பாலியல் தொல்லை- தந்தைக்கு 14 ஆண்டு சிறை
1 min read
Father gets 14 years in prison for sexually assaulting daughter in Nellai
30/4/2026
நெல்லை மாவட்டம் திருநெல்வேலி பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன்(வயது 36) இவர் தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாய் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலமுருகன் குறித்து புகார் அளித்தார் புகாரின் பேரில் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலமுருகனை போக்ஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கு விசாரித்த போக்கு சிறப்பு நீதிபதி சுரேஷ்குமார் சிறுவையின் தந்தை பாலமுருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்வு அளித்தார், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் மூன்று லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் விசாரணை விரைவாக நடைபெற சிறப்பாக கண்காணித்த ஏடிஎஸ்பி சண்முகம் நெல்லை ஊரக உட்கோட்டு டிஎஸ்பி ரகுபதி ராஜா மற்றும் நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையம் மாரியம்மாள் தலைமை காவலர் பார்வதி மற்றும் அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் பாராட்டினார்.