June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் திருவள்ளுவர் கழக மாதாந்திர கூட்டம்

1 min read

oplus_131074

Kadayam Thiruvalluvar Kazhagam Monthly Meeting

30.4.2026
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் இன்று(வியாழக்கிழமை ) கடையம் வடக்கு தேர் தெருவி்ல் உள்ள கே.எஸ்.எஸ்.சிற்றரங்கில் நடந்தது. திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார்.
செ.சோமசுந்தரம் வரவேற்றுபேசினார். ஆசிரியை அனிதா ஷிபா லில்லி ஒரு குறள் சிந்தனை சொன்னார்.


“பாயிரமும் பனுவலும்” என்ற தலைப்பில் பெங்களூர தமி்ழ்த் தென்றல் ஒருங்கிணைப்பாளர் க.சோணாச்சலம் சிறப்புரை ஆற்றினார். அவருக்கு திருவள்ளுவர் கழக துணைத்தலைவர் க.கோபால் பொன்னாடை போர்த்தனார்.

“பற்றற்றான் பற்று” என்ற தலைப்பில் பெங்களூரு தமிழ் இலக்கிய பேரவை தலைவர் சு.ஆறுமுகம் பேசினார். அவருக்கு பி.முருகன் பொன்னாடை போர்த்தினார்.

பட்டிமன்ற நடுவர் க.முத்துமணி நகைச்சுவை விருந்து வழங்கினார். சேவாலயா மாணவிகள் கடவுள் வாழ்த்துப்பாடினார். திருவள்ளவர் கழக செயலாளர் கல்யாணிசிவகாமி நாதன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியதோடு, பல்வேறு குறிப்புகளையும் எடுத்துக்கூறினார், திருவள்ளுவர் கழக துணைத்தலைவர் க.கோபால் நன்றி கூறினார். அனைவருக்கும் லயன் பி.முருகன் இரவு விருந்து அளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *