திருச்செந்தூர் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
1 min read
Nainar Nagendran Swami Darshan at Subramania Swamy Temple, Tiruchendur
1.5.2028
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். மேலும் இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“கருணைக் கடலே கந்தா போற்றி”
இன்றைய தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அப்பன் முருகனை மனம் உருகி தரிசித்தேன்.பாரத மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ முருகப்பெருமானை வேண்டிக் கொண்டேன். வெற்றிவேல்! வீரவேல்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.