புதிய தமிழகம் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழப்பு
1 min read
Deposit loss everywhere in new Tamil Nadu
5.5.2026
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவரான தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர புதிய தமிழகம் கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததாலும், புதிய தமிழகத்தை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துப் பேசியதாலும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அந்த கட்சி தனித்துப் போட் டியிடும் என அறிவித்தார். தனித்துப் போட்டியிட்டு எங்கள் பலத்தை வெளிப்படுத்துவோம் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1996, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று 2 முறை எம்எல்ஏவாக இருந்த கிருஷ்ணசாமி அந்தத் தொகுதியில் இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கினார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் தவெக வெற்றி பெற்ற நிலையில் திமுக 2ம் இடமும், அமமுக 3ம் இடமும் பிடித்தது. நாம் தமிழர் கட்சி 4ம் இடத்தை பிடித்தது. டாக்டர் கிருஷ்ணசாமி 15,050 ஓட்டுகள் பெற்று 5ம் இடம் பிடித்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் ஷ்யாம் ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை சட்டமன்றத் தொகுதியில் தனித்து களம் கண்டார். இவர் 10,634 ஓட்டுகள் இடம் பிடித்தார். நாங்குநேரி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தமிழ்செல்வி 11,039 ஓட்டுகள் பெற்று 5ம் இடத்தை பிடித்தார்.
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளர் திருமலைக்குமார் 1365 ஓட்டுகள் பெற்று 6ம் இடமும், வாசுதேவநல்லூர் தொகுதி மில் புதிய தமிழகம் வேட்பாளர் பால்ராஜ் 4,119 ஓட்டுகள் பெற்று 5ம் இடமும், கடையநல்லூர் தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளர் கவிதா 2.882 ஓட்டுகள் ஓட்டுகள் பெற்று பெற்று 5ம் இட இடமும், ஆலங்குளம் தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளர் உதய குமார் 1.620 ஓட்டுகள் பெற்று 6வது இடமும், சங்கரன்கோவில் தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளர் பிரபாகரன் 4,612 ஓட்டுகள் பெற்று 6வது இடமும் பெற்றனர்.
தூத்துக்குடியில் புதிய தமிழகம் வேட்பாளர் மாடசாமி 2,057 ஓட்டுகள் பெற்று 5ம் இடமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் புதிய தமிழகம் வேட்பாளர் ராஜகதன் 1,015 ஓட்டுகள் பெற்று 6ம் இடமும் பிடித்தனர்.
மேலும் தனித்துப் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.