June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட தேர்தல் முடிவு ஓர் அலசல்

1 min read

An analysis of the Tenkasi district election results

5.6.2026
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் 5 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் இம்முறை திமுக கூட்டணியில் திமுக நேரடியாக தென்காசி. ஆலங்குளம்,வாசுதேவநல்லூர் ஆகிய 3 தொகுதிகளிலும் கடைய நல்லூர் தொகுதி கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட போதும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. சங்கரன்கோவில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. மொத்த முள்ள 5 தொகுதிகளில் திமுக 3 இடங்களிலும், கூட்டணிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்த தேர்தலில் வாசு தேவநல்லூர், சங்கரன்கோ வில், தென்காசி ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே திமுக மற்றும் கூட்டணி கட்சியான மதிமுக காங்கிரஸ் ஆகியவை வெற்றி பெற்றது. கடையநல்லூர். மற்றும் ஆலங்குளத்தில் அதிமுக வெற்றி பெற்றது.

இம்முறை தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல் லூர். கடையநல்லூர் ஆகிய 4 தொகுதிகளில் திமுககூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சங்க ரன்கோவிலில் மட்டும் அதிமுக வென்றுள்ளது. மேலும் கடந்த முறை அதிமுக வசம் இருந்த ஆலங்குளம் மற்றும் கடையநல்லூர் தொகுதிகளில் இம்முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.

கடையநல்லூரில் தொடரும் சென்டிமென்ட்

க டையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை பலமுறை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை தந்த தொகுதியாகும். முன்னாள் முதல்வர் காமராஜர் அமைச்சரவையில் மஜீத் அதிமுகவில் நாகூர்மீரான், செந்தூர்பாண்டியன் ஆகிய அமைச்சர்களை தந்த தொகுதி கா.மு. கதிரவன், நயினார் முஹம்மது ரசாக், அபூபக்கர், சுப்பையாபாண்டியன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக இருந்துள்ளனர். இவர்களில் ஒருமுறை எம்எல்ஏவாக பதவி வகித்து 2வது முறை போட்டியிட்ட யாரும் மீண்டும் வெற்றி பெற்றதில்லை என்ற சென் டிமென்ட் உள்ளது. தற்போது எம்எல்ஏவாக இருக்கும் அதிமுக வேட்பாளர் செ.கிருஷ்ணமுரளி இதனை உடைத்து 2வது முறையாக வெற்றி பெறுவார் என்று பலரும் கருதினார்கள்.
ஆனால் மதிமுக வேட்பாளர் தி.மு.இராசேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். கடையநல்லூரை இம்முறை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால் கடையநல்லூர் தொகுதி சென்டிமென்ட் தொடர்கிறது.

தென்காசி மாவட்டத்தில் திமுக சின்னமான உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிட்ட தென்காசி. கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்த வரை திமுகவிற்கு இது 100% வெற்றி என்று அக்கட்சியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *