August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய்க்கு இலங்கை தலைவர்கள் வாழ்த்து

1 min read

Sri Lankan leaders congratulate Vijay

6.5.2026
தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் கட்சியை வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு கொண்டு சென்ற, நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்க்கு இலங்கை தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முதன்முறையாக போட்டியிட்டு 107 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சே விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

விஜய்யின் இந்த மாபெரும் வெற்றிக்கு எனது வாழ்த்துகள். இனிமேல்தான் உண்மையான அரசியல் பயணம் தொடங்குகிறது. இந்த சாவலான பயணத்தில் மக்களின் தேவைகளை திறம்பட செய்து முடிக்க விஜய்க்கும் அவரின் குழுவிற்கும் வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும், இரு நாடுகளிலும் உள்ள மக்களை பாதிக்கும் விவகாரங்கள் தொடர்பாக, இலங்கையுடனான உறவு இன்னும் வலுவானதாகவும் நேர்மறையானதாகவும் அமைவதை தாம் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து ஜோசப் விஜய்யின் வரலாற்று சிறப்பான வெற்றியை பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் தவெக-வின் வெற்றியை பாராட்டி கொண்டாடியதோடு, அங்குள்ள இளைஞர்களும் விஜய்யின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *