அரபிக்கடலில் தத்தளித்த இந்தியக் கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படை
1 min read
Pakistan Navy helps Indian ship stranded in Arabian Sea
6.5.2026
அரபிக்கடலில் பயணம் செய்துகொண்டிருந்த எம்.வி. கவுதம் என்ற இந்தியக் கப்பல், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றது. அப்போது நிலையை உணர்ந்த இந்திய அதிகாரிகள் உடனடியாக உதவி கோரி பாகிஸ்தான் தரப்பிற்குத் தகவல் தெரிவித்தனர். அந்த அழைப்பை ஏற்று மனிதாபிமான அடிப்படையில் விரைந்து செயல்பட்ட பாகிஸ்தான் கடற்படையினர், உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றனர்.
இந்திய அதிகாரிகள் உதவிக்கு அழைத்ததன் பேரில், விரைந்து சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் அந்த கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு தேவையான உணவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கினர்.