June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தவெக எம்.எல்.ஏக்களுடன் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை

1 min read

Sengottaiyan holds intensive consultations with Thaweka MLAs

7.5.2026
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை தவெக கோரியிருந்தது. காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக ஆதரவு கொடுக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று 108 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், கவர்னர் அர்லேகரை நேரில் சந்தித்து விஜய் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சமர்ப்பித்தார்.ஆனால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து இன்று இரண்டாவது முறையாக ஆளுநரை விஜய் சந்தித்தார்.

அப்போதும் ஆளுநர் தரப்பில் இருந்து சாதகமான பதில் வரவில்லை. இந்த பரபரப்புக்கு இடையே, தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை அக்கட்சி தலைமை நடத்தியது. இதில் தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், எம்.எல்.ஏக்களுக்கு ஆலோசனை வழங்கினார். விஜய் பதவியேற்பு நிகழ்வு குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் தவெகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *