August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பாபநாசம் அருகே சாலையில் ஜோடியாக வலம் வந்த கரடிகள்

1 min read

Bears roaming in pairs on the road near Papanasam

7.5.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே
பாபநாசம் மணிமுத்தாறு பகுதிகளில்
உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யடிவார கிராமங்களில் யானை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருந்து வரும் நிலையில் நேற்று விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கரடிகள் ஜோடியாக வலம் வந்த காட்சியை கண்ட பொதுமக்கள் கடும் வீதி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு, கோட்டைவிளைபட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் நாளுக்கு நாள் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அதன்படி அனவன்குடியிருப்பு கிராமத்தில் ஜோடியாக சுற்றி திரிந்த கரடிகள் அப்பகுதியினர் நடமாட்டத்தை கண்டதும் சாலையில் தலை தெறிக்க ஓடின. அப்போது ஆபத்தை உணராமல் அங்கிருந்து வரும் அந்த கரடிகளை பின்தொடர்ந்து சென்று வீடியோ எடுத்தனர்.

மேலும் வனவிலங்குகள் – மனித மோதல் ஏற்படுவதற்கு முன்பாக கரடிகள் சுற்றித் திரிவதை தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கையும வைத்துள்ளனர் .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *