மெஜாரிட்டியை ஆளுநர் ஏற்பு: விஜய் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்
1 min read
Governor accepts majority: Vijay to take oath as Chief Minister tomorrow
9.5.2026
தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார். அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டார்.
விஜய், இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாளை மாலை 3.15 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.