June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினாலும் 100 யூனிட் இலவச மின்சாரம்

1 min read

100 units of free electricity even if you use more than 500 units

10.5.2026
வீடுகளில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும் என விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இதேபோன்று, 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

”தகுதியுள்ள அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவும், பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்யவும், மக்களின் நிதி நெருக்கடியைக் குறைக்கவும், சாமானிய மக்கள் மீதான சுமையைக் குறைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும் இதற்காக ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் மின் கட்டண மானியத்தை அரசே ஏற்கவும் அரசு ஆணையிடுகிறது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணக் கட்டமைப்பே தொடர்ந்து அமலில் இருக்கும்”
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *