தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு
1 min read
Chief Minister Vijay reviews the law and order situation in Tamil Nadu
10.5.2026
தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, இது தொடர்பாக தொடர்ச்சியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தலைமை செயலர் சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், முதல்வரின் கூடுதல் தலைமை செயலர் செந்தில்குமார், முதல்வரின் செயலளர் லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே,, சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விஜய் ஆய்வு மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.