June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

125 நாட்கள் வேலை திட்டம் ஜூலை 1-ந் தேதி முதல் அமல்

1 min read

125-day work program to be implemented from July 1

12.5.2026
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (100 நாள் வேலை திட்டம்) மாற்றியமைக்கப்பட்டு ‘வளர்ச்சியடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதா ரத்துக்கான உத்தரவாத திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட் டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளு மன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்பு தல் அளித்தார்.இந்நிலையில் இந்த சட்டம் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அம லுக்கு வரும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப் பில் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில் “ஜூன் 30 நிலவரப்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடை பெற்று வரும் பணிகள், தடையின்றி பாதுகாக்கப்பட்டு புதிய கட் டமைப்புக்கு மாற்றப்படும். ஊதியம் வழங்கல், குறைதீர்ப்பு, இடைக்கால ஏற்பாடுகள் தொடர்பான வரைவு விதிகள், மாநிலங் கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து தயா ரிக்கப்பட்டு வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *