August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 50 மது கடைகள் மூடல்

1 min read


Chief Minister Vijay’s order echoes; 50 liquor shops closed in a single day

12.5.2026
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் இருந்து, 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மது கடைகளை மூட, முதல்வர் விஜய் உத்தரவிட்ட நிலையில், இன்று 50 கடைகள் மூடப்பட்டன. இந்த உத்தரவில், முதல்முறையாக பஸ் நிலையங்களுக்கு அருகில் உள்ள மது கடைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனம், 4,765 சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைளை விற்கிறது. 2003ம் ஆண்டு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி, மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வழிபாட்டு தலம் அல்லது கல்வி நிலையங்களில் இருந்து, 50 மீட்டர் துாரத்திற்குள், பிற பகுதிகளில், 100 மீட்டர் துாரத்திற்குள்ளும் மது கடைகள் அமைக்க கூடாது.

குடியிருப்பு பகுதிகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள மது கடைகளை மூட, பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் அருகில் இருந்து, 500 மீட்டர் வரை அமைந்துள்ள மது கடைகளை மூடும்படி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மூடப்பட வேண்டிய கடைகள் விபரங்களை, அதிகாரிகள் கணக்கெடுத்து வந்தனர். வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பஸ் நிலையங்கள் அருகில் உள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை, அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடப்பட உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *