June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக தேர்தலில் ஓட்டளித்த வெளிநாட்டவர்கள் 2 நாட்களில் 20 பேர் கைது

1 min read

20 foreigners arrested in 2 days for voting in Tamil Nadu elections

15/5/2026
வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துள்ளனர். எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணியில் சிக்காமல் அவர்கள் ஓட்டளித்தது குறித்து விசாரணை நடக்கிறது.
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சிலர் சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து கைதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்களில் சென்னை, மதுரையில் 20 க்கும் மேற்பட்டோர் பிடிபட்டுள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய குடிமகன்களுக்கே ஓட்டுரிமை உள்ளது. அதேநேரம் இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை குடியுரிமை பெற்றோர் அகதிகளாக வசிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் திருவாதவூர், உச்சப்பட்டி, ஆனையூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு கல்வி, மருத்துவம், ரேஷன், உதவித்தொகை என எல்லாமும் உள்ளது. ஆனால் ஓட்டுரிமை கிடையாது.

இந்த அகதிகளில் பலர் அவ்வப்போது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வாடகை வீடுகளில் தங்கியும், இங்குள்ள பெண்களை மணந்தும் இந்தியர்களைப் போலவே ஆவணங்களைப் பெற்று அடையாள அட்டையும் பெற்று விடுகின்றனர். இதன்பின் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கலாம். இதனால் சமீபத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியிலும் அவர்கள் சிக்காமல் இருந்திருக்கலாம். விசாரணையில்தான் அந்த விவரம் தெரியவரும். தற்போது பிடிபட்டவர்கள் யார், இந்திய குடியுரிமை உள்ளதா, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி என விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *