நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
1 min read
Prime Minister Modi receives rousing welcome in Netherlands
16.5.2026
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 6 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளார்.
இந்த பயணத்துக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று சென்றார். இதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அமீரகம் புறப்பட்டு சென்றார். அமீரக வான் வெளியில் பிரதமரின் விமானம் நுழைந்த போது அமீரகத்தின் எப்.16 ரக ராணுவ விமானங்கள் சூழ பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்றார். அப்போது முப்படையினரின் ராணுவ அணிவ குப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
மேலும் இந்தியா-அமீரகம் இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத் துவது, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட கூட்டு பொருளாதார ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகரித்துள்ள பலன்கள் குறித்து பேசப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினையை தீர்ப்பது குறித்து முக்கியமாக பேச்சு வார்த்தை நடந்தது.
தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே ராணுவம், எரிசக்தி பாதுகாப்பு, கப்பல் பழுது நீக்கும் தளம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
குறிப்பாக இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பை உயர்த்தவும். அதில் அமீரகத்தின் பங்க ளிப்பை 3 கோடி பீப்பாயாக அதிகரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் எரிவாயு வினி யோகம் தொடர்பாக தனியாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அமீரகம் 500 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.47,500 கோடி) முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தமும் அடங்கும். பின்னர் அமீரக சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி நெதர்லாந்து சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு அந்நாட்டு முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று மோடியை வரவேற்றனர். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளேன். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்திய நிலையில் நெதர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நான் பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது, மேலும் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரை சந்திக்க உள்ளேன். பிரமாண்ட நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.