June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கும்- மத்திய அரசு தகவல்

1 min read

Will continue to buy crude oil from Russia – Central Government information

19.5.2026
டெல்லியில் இன்று மேற்கு ஆசிய நிலைமையின் பாதிப்புகள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணைச்செயலாளர் சுஜாதா சர்மா பேசுகையில் பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஷியா மீதான அமெரிக்காவின் தளர்வு இருக்கலாம். ஆனால் நாங்கள் முன்பும் ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்து வருகிறோம் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் போதுமான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ரஷிய கடல்வழியாக கச்சா எண்ணெயை விற்பனை செய்வதற்கும், வினியோகிப்பதற்கும் அனுமதி அளித்திருந்த தற்காலிக அமெரிக்க தடை விலக்கு கடந்த 16-ந்தேதி காலாவதியானது. மீண்டும் விலக்கு அளிக்கப்பட்டாலும் சரி, அளிக்கப்படாவிட்டாலும் சரி. ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *