June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகில் பைக்கில் புகையிலை விற்றவர் கைது

1 min read


Man arrested for selling tobacco on bike near shop

21.6.2026
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பல இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் நபர் கைதானார்.

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த முதலியார்பட்டி ரயில்வே கேட் அருகே கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் மாடசாமி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு பைக்கை சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தின் பெட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 75 பவுச்கள் அடங்கிய ஐந்து பெரிய பாக்கெட் கணேஷ் புகையிலைகள் பிடிபட்டது.

கடையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி புகையிலை விற்ற நபரை பிடித்து விசாரித்த போது அவர் கடையம் அருகே முத்துமாலைபுரம் வடக்கு தெருவில் வசித்து வரும் ராமர் (வயது 55). என்பதும் இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் சென்று பல இடங்களில் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் என்பதும் தெரிய வந்தது. இவர் ஏற்கனவே இரண்டு முறை இதேபோன்று அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற வழக்கில் கைதாகியுள்ளார் என்பதும் தெரிய வந்தது .

இதையடுத்து கடையம் காவல் நிலைய துணை ஆய்வாளர் மாடசாமி புகையிலை விற்ற ராமர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து ராமரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இது குறித்து கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *