ஆப்பிரிக்க பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min read
Central government advises Indians to avoid travel to Africa
24.5.2026
ஆப்பிரிக்கா நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், எபோலா வைரஸ் பரவலாக பரவி வருகிறது. இந்த வைரஸ், விலங்குகள் இடம் இருந்து மனிதர்களுக்கு தொற்ற கூடியது. இந்த நோய்கள் உடல் உறுப்புகளை தாக்கக்கூடியது. இந்த வைரஸ் தாக்கம் குறித்து முறையாக தொடக்கத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வந்தால், நோயின் கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த நோய் தாக்கம் குறித்து முறையாக கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டினால் உயிர் இழப்புகளும் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. எபோலா வைரஸ் ஆப்பிரிக்கா நாடுகளில் தற்போது வேகமாக பரவுவதை அடுத்து, அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இதற்கிடையே ஆப்பிரிக்க பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. காங்கா, உகாண்டா, சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்து விடுமாறு அறிவுறுத்தியுள்ளது. எபோலா வைரசால் ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்கள் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.