தென்காசியில் வர்த்தக கண்காட்சி
1 min read
Trade fair in Tenkasi
6.6.2026
தென்காசி மாவட்டம் தனியார் மண்டபத்தில் இன்று (06.062026) தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பி.மதன்ராஜா தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங். தலைமையில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டார்.
தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் வர்த்தக கண்காட்சியின் 2-ஆம் நாள் நிகழ்வாக குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில் வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பங்களைப் பார்வையிட்டு, அதன் செயல் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தொழில் முன்னோடியினர்களைப் பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி, மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன், முக்கிய பிரமுகர்கள் ராஜபிரகாஷ், நியாஸ், மாரியப்பன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.