திப்பணம்பட்டி: ரெயில்வே விழிப்புணர்வு வகுப்பில் மாணவ- மாணவிகள்
1 min read
Thippanampatti: Students in Railway Awareness Class
24.6.2026
தென்காசி மாவட்டம், திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் பாரதியார் வாசகர் வட்டம் சார்பில் கோடைகால சிறப்பு ஆங்கில வகுப்பு மற்றும் பொது அறிவு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன், ஒரு பகுதியாக, இந்திய ரெயில்வே பற்றிய சிறப்பு வகுப்பு நேற்று நடைபெற்றது. நூலகர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
தென்காசி மாவட்ட ரயில்வே பயணிகள் நலச் சங்க தலைவர் பாண்டியராஜா பங்கேற்று, இந்திய ரெயில்வே பற்றியும் ரெயில்வே நிலையத்தில் நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள், ரெயில் தண்டவாளம் குறித்தும்,ரெயில் வகைகள், ரெயிலில் இருக்கும் பல அடிப்படைத் தகவல்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், மாணவர்களுக்கு பொது அறிவுப் போட்டி நடத்தப்பட்டது
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வாசகர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில்வாசகர் வட்ட தலைவர் தங்கராஜ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலக உதவியாளர் கனகராஜ் செய்திருந்தார்.