June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மேற்கு வங்கத்தில் 91 திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டாக ராஜினாமா

1 min read


91 Trinamool Congress councilors resign en masse in West Bengal

26.5.2026
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 207 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்த படுதோல்வியை அடுத்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி அலை எழுந்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 91 திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

பாஜகவின் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் எடுத்துள்ள அதிரடி நிர்வாக நடவடிக்கையே இந்த கூட்டு ராஜினாமாவிற்குப் பின்னணியாகக் கூறப்படுகிறது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற வளர்ச்சி நிதி முறைகேடுகள், தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக டெண்டர்களை வாரி வழங்கியது மற்றும் போலி பில்கள் மூலம் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தது போன்ற புகார்கள் மீது புதிய அரசு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் கடந்த கால நிதி செயல்பாடுகள் குறித்து தணிக்கை நடத்தப் புதிய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊழல் தடுப்பு விசாரணையில் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினாலேயே திரிணாமுல் நகராட்சித் தலைவர்களும், கவுன்சிலர்களும் அவசர அவசரமாகப் பதவிகளைத் துறந்து வருகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது.

தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பலர் தற்பொழுது ஆளும் பாஜவுக்கு தாவ தயாராகி வருகின்றனர்.

இந்த திடீர் கூட்டு ராஜினாமாக்கள் காரணமாக, மேற்கு வங்கத்தின் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நிர்வாகக் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *