மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது
1 min read
4 terrorists arrested in Manipur
27.5.2026
மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. மாநில முதல்-மந்திரியாக கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றார்.
அதேவேளை, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப்படையினர் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், மணிப்பூரின் கிழக்கு இம்பால், தவ்பெல் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப்படையினர் திங்கள் அன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பயங்கரவாதிகளிடமும் பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.